Tamilnadu
சென்னையில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்.. கடற்கரை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மீதி ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலின் பிரேக் பிடிக்காமல் போனதால் தடம்புரண்ட மின்சார ரயில் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் இருந்து நடைமேடை மீது ஏறியிருக்கிறது.
இதனால் முதல் பெட்டி பாதிக்கு மேல் நடைமேடை மீதி ஏறியதில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. அதேச்சமயம் ரயிலில் வேறு எவரும் இல்லாததால் உயிர் சேதவும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காயமுற்ற ரயில் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்துள்ள ரயில்வே போலிஸார், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இத்தகைய விபத்து நடந்தது அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் தொற்றிக்கொண்டுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !