Tamilnadu
கீழடியை தொடர்ந்து தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் விருதுநகர் அகழாய்வு: தொன்மையான பொருட்கள் கண்டுபிடிப்பு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில், 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில், கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள் உள்ளிட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தொன்மையான மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிவதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் சில தொன்மையான பொருட்கள் கிடைத்துள்ளது தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!