Tamilnadu
வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்: சோகத்தில் மூழ்கிய உரக்கடை வியாபாரி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள லட்சுமி அக்ரோ சர்வீஸ் கடை. நேற்று (ஏப்.,18) இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றிருக்கிறார்கள்.
இன்று (ஏப்.,19) வழக்கம்போல் கடையை திறந்த கடையின் உரிமையாளர் பாபு, கடையில் உள்ள கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
நள்ளிரவில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்காக உர கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளை போனதையடுத்து அக்குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
செஞ்சியில் முக்கிய பகுதியான விழுப்புரம் சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நள்ளிரவில் பணம் கொள்ளை போன நிகழ்வு வியாபாரிகளிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாபுவின் கடையில் இருந்து 5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செஞ்சி போலிஸார் வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !