Tamilnadu

”அன்பு,கருணை,தாயுள்ளத்துடன் தமிழ்நாட்டை காக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: இயக்குநர் வசந்தபாலன் புகழாரம்!

அன்பு, கருணை, தாயுள்ளத்துடன் தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்து வருவதாக இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ சமயம் இணையதள தொலைக் காட்சியில் இயக்குநர் வசந்தபாலன் அளித்த பேட்டி வருமாறு :-

ஒருவர் மூன்றாவது முறையாக ஓரு சி.எம்.ஆக இருந்தால், அந்த சி.எம்., எப்படிப்பட்ட நிர்வாகத் திறமை குவாலிட்டியோடு இருப்பாரோ, அந்தஅளவிற்கு குவாலிட்டியோடு தற்போதைய சி.எம்.அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

அவர் முதல் நாளில் பதவி ஏற்றார். பதினைந்தாவது வருடத்தில் பதவி ஏற்பதைப் போன்ற அனுபவத்துடன் அதனைச் செய்தார். அது மட்டுமல்ல; மைக்ரோ டீட்டைல்சை கவனிக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றிஇருக்கு. இது வந்து ஒரு அரசின் மேக்ரோவா பல திட்டங்களை அறிவிக்கிறார். அதாவது பாலம் கட்டுவது, சாலை போடுவது, பல்கலைக் கழகம் எழுப்பவது, மருத்துவமனை கட்டுவது இவையெல்லாம் மேக்ரோவா திட்டம்.

மைக்ரோ திட்டங்கள் என்னவென்றால் பள்ளி விட்டு நின்ற குழந்தைகளை மறுபடியும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான 200 கோடிரூபாயை இந்த அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இதுதான் மைக்ரோ திட்டம். இவர்கள்தான் நாளைய தூண்கள். இந்தத் தொழிலாளர்களுக்கு ஸ்டூல்கள் கொடுப்பது சாதாரண விஷயமா?

இதனையும் இந்த அரசு அன்புடன், கருணையுடன், உன்னிப்புடன் கவனிக்கிறது, இலங்கைத் தமிழர்களுக்கான அவர்கள் இருப்பதற்கான உரிமையை இந்த அரசு பெற்றுத் தந்து இருக்கிறது. ரொம்ப கூர்மையா தாய் உள்ளத்துடன் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறது. அட்மினிஸ்டேசன் - நிர்வாகத் திறமை இவ்வளவு பவர்புல்லா நடந்துக்கிட்டு இருக்கு. இல்லை இந்த முதலமைச்சர் அதிகாரம் என்பது, அந்த இருக்கை என்பது இவ்வளவு பேருக்கு, சில நாட்களில் நல்லது செய்கின்ற ஒரு இடமாக அது மாறி இருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

நான் வந்து, முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும்எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Also Read: “ஓராண்டு முடிவதற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு; இது அளவிட முடியாத சாதனை”: முதல்வர் பெருமிதம்!