Tamilnadu
தமிழ்நாட்டில் படித்ததாக போலி சான்றிதழ்.. கர்நாடகாவில் அரசு வேலையில் சேர்ந்த 2 பேர் கைது : பின்னணி என்ன?
கடந்தாண்டு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தபால் துறை பணிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டு பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியல், தமிழ்நாடு தபால் துறைக்கு வந்துள்ளது. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கி இருந்தனர்.
மேலும் அச்சான்றிதழில் தமிழக பள்ளிக் கல்வியில் முதல் மொழியாக இந்தியை படித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த தபால்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழை பரிசோதித்தனர்.
மேலும் பத்தாம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இதுதொடர்பான சான்றிதழ்களை பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்தி மொழி முதல் பாடமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு வந்தவர்களில் ஏராளமானோர் அளித்துள்ள சான்றிதழ்கள் போலியானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டைப் போல் கர்நாடகாவிலும் போலி சான்றிழ்களை சமர்ப்பித்து 20 பேர் பணிக்குச் சேர்ந்துள்ளதை அம்மாநில கல்வித்துறை கண்டறிந்துள்ளது. இதனையடுத்து அவர்களில் 20 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையில் விசாரணை செய்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளனர்.
அந்த விசாரணையின்போது, போலி மதிப்பெண்கள் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யவும் அந்தத் துறைகளுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !