Tamilnadu

போலி GST ரசீது.. ரூ.35 லட்சத்தை ‘அபேஸ்' செய்த சாஃப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கைது!

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி, போலி ரசீது வாயிலாக ஜி.எஸ்.டி வரி கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், சாந்தி நகரைச் சேர்ந்தவர் ஷைனி இவாஞ்சலின் (24). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

ஜி.எஸ்.டி வரி 70 லட்சம் ரூபாய் செலுத்தும் பணியை ஷைனி இவாஞ்சலினிடம், மேலாளர் ஒப்படைத்துள்ளார். ஆனால் அவர், 70 லட்சத்தில் 35 லட்சம் ரூபாய் மட்டும் ஜி.எஸ்.டி வரி கட்டிவிட்டு, ரூ.37 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். அதற்கு பதில் போலியான ரசீதுகள் வைத்து ஜி.எஸ்.டி.யில் கணக்கு காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அலுவகத்தின் உயரதிகாரிகள் அலுவலக கணக்குகளை சரிபார்த்தபோது, போலியான ரசீதுகளை வைத்து பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தனியார் மென்பொருள் நிறுவன மேலாளர் செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் செய்தார். புகாரின்படி அவரை, குற்றப்பிரிவு போலிஸார் ஓசூரில் இருந்த இவாஞ்சலினை கைது செய்தனர்.

பெண் அதிகாரி ஒருவர் நிறுவனத்திலிருந்து ரூ. 35 லட்சத்தை கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விருந்துக்கு கூப்பிட்டுட்டு பீஸ் வைக்கல” : உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!