Tamilnadu
"தமிழ்தான் இணைப்பு மொழி".. ஒற்றை வரியில் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.
அண்மையில், டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் #இந்தி_தெரியாது_போடா, #StopHindiImposition ஹேஷ்டேக்குகள் மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதிதாசனின் தமிழுக்கு அமுதென்று பெயர் என்ற கவிதையில் வரும் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்று பதிவிட்டு, ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய ஓவியத்தைப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்கள், அவரிடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் இந்தி இணைப்பு பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்தான் இணைப்பு மொழி என ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!