Tamilnadu

“எந்த துறையிடம் என்ன கேள்வி கேட்பதென்றே தெரியாமல்..” : வானதி சீனிவாசனுக்கு சபாநாயகர் பதிலடி!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நகராட்சி பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி ஆகியோர் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது விவாதத்தின் மீது பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை மாவட்டத்தில் பூங்கா அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் இன்றைய விவாதம் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையை சார்ந்து உள்ள நிலையில் வானதி சீனிவாசனின் இத்தகைய கேள்விக்கு உடனே தலையீட்ட சபாநாயகர் அப்பாவு, மூலக் கேள்விக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து உரிய அமைச்சரிடம் இதுதொடர்பாக கேளுங்கள் என தெரிவித்தார்.

இந்நிலையில் எந்த துறையிடம், எந்த கேள்வி கேட்பதென்றே தெரியாமல் பா.ஜ.க எம்.எல்.ஏ இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: “கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது..?” : வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வானதி - கோவை MP பதிலடி!