Tamilnadu
வெப்பத்தை தணிக்க வீட்டின் மீது தண்ணீர் ஊற்றிய சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியைச் சேர்ந்தவர் சனாவுல்லா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சனாவுல்லாவும் அவரது மகன் முகமது ஜக்கரியாவும் பெங்களூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போது ரம்ஜான் பண்டிகை தொடங்கியுள்ளதால் பெங்களூருவில் இருந்து இருவரும் ஆம்பூருக்கு வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஆம்பூரில் கோடை வெப்பம் அதிமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் முகமது ஜக்கரியா தங்கள் வீட்டின் மேல் பகுதியில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே சென்று கொண்டிருந்த மின்சாரக் கம்பி சிறுவன் மீது உரசியுள்ளது. இதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!