Tamilnadu
தேயிலை தோட்டத்தில் பறந்து வந்து விழுந்த கார்.. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்.. என்ன நடந்தது தெரியுமா?
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்பட ஷூட்டிங் களைகட்டியுள்ளது. தற்போது உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ்,தெலுங்கு திரைப்படங்களுக்கான ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுனா நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் தூரம் உயரத்திற்குச் சென்று பறந்து வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்தது. இதைப்பார்த்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரத்தில் அந்தக் காட்சி திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளில் பதிவு செய்யப்படுவதற்காக எடுக்கப்பட்டது என தெரிய வந்ததை தொடர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!