Tamilnadu
தனியாகச் செல்லும் பெண்களே குறி.. வழிப்பறி கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த போலிஸ் - விசாரணையில் பகீர் தகவல்!
குமரி மாவட்டம் கொல்லங்கோடு மார்தாண்டம்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். மீன்படி தொழிலாளியான இவரது மனைவி ஜெனட் (38). இவர்கள் பாலவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெனட் நேற்று காலை கடைக்கு பொருட்களுக்கு வாங்கச் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியாக வந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கழற்ற சொல்லி மிரட்டியுள்ளார்.
மேலும் அப்போது பார்சலில் இருந்து, 500 ரூபாய் பறித்துள்ளனர். உடனே அவர் சத்தம்போடவே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடைகாவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இருவரையும் போலிஸார் பிடித்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
போலிஸார் நடத்திய விசாரணையில், காஞ்சாங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அனிஷ் என்பது தெரியவந்தது. இவர்களை பல நாட்களாக போலிஸார் தேடி வந்தநிலையில், இவர்களை போலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரோட்டில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!