Tamilnadu

நாட்டு வெடிகுண்டு வீசிய கஞ்சா வியாபாரி.. துணிச்சலுடன் மடக்கி பிடித்த போலிஸ் - ரவுடிகள் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மசூதி தெருவில் கஞ்சா விற்பதாக நகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக நகர காவல் ஆய்வார் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் சந்தோஷ், ஏழுமலை அங்கு சென்று விசாரனை நடத்தினர். அப்போது ரியாஸ் அகமது(19) என்பவனை பிடித்து விசாரனை நடத்திய போது அவன் கைப்பையை வீசியதாக கூறப்படுகிறது.

அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் காவலர்கள் சந்தோஷ் (24) ஏழுமலை (24) மற்றும் கஞ்சா கடத்தலில் கைதான குற்றவாளி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயசூர்யா (24) ஆகிய முவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. முவரும் உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்கள்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ரியாஸ் அகமது குற்றவாளியை கைது செய்த அரக்கோணம் நகர காவல்துறையினர், அவனிடமிருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் நாட்டு வெடிகுண்டு எங்கு கிடைத்தது என கஞ்சா எங்கேயிருந்து கடத்தா வரப்படுகின்றது என தீவிர விசாரனை நடத்தினர்.

கஞ்சா தாம்பரம் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வருவதாகவும், நாட்டு வெடிகுண்டு சென்னையிலிருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்ததாகவும் ரவுடிகள் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வருவதாகவும், அதில் ஒரு பிரிவினர் மீது வீச வைத்திருப்பதாகவும் விசாரனையில் தெரிய வந்தது.

இதயைடுத்து இரு தனிப்படை அமைக்கப்பட்டு ஆந்திர மற்றும் சென்னையில் தனிப்படை காவலர்கள் தீவிர விசாரனை நடத்தி வருவதாகவும் விரைவில் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

Also Read: ஒசூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை.. சுட்டுக்கொன்ற நபர் சொன்ன அதிர்ச்சி காரணம் : நடந்தது என்ன?