Tamilnadu
ஒசூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை.. சுட்டுக்கொன்ற நபர் சொன்ன அதிர்ச்சி காரணம் : நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது பனைமரம்மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது காட்டுயானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காட்டுயானையை உடல் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி புதைத்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜவளகிரி அருகே உள்ள திம்மன்தொட்டி கிராமத்தை சேர்ந்த மாரப்பன் என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் காட்டுயானையை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வளர்த்து வரும் மாடுகளை காட்டு யானை தாக்க வந்ததால் அதனை துப்பாக்கியால் சுட்டதும் காட்டுப்பகுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் யானை இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாரப்பனிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை வனத்து றையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!