Tamilnadu

“ரூ.2,600 கோடி முதலீடு.. 9,700 பேருக்கு வேலை” - முதல்வரின் துபாய் பயணத்தை பாராட்டிய அமீரக ஊடகங்கள் !

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபி புறப்பட்டார். முன்னதாக துபாயில் 5 நிறுவனங்களுடன் ரூ.2600 கோடி முதலீட்டில் 9700 பேருக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் வண்ணம் 5 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டுள்ள துபாய் பயணத்தை அமீரக பத்திரிகைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் பாராட்டியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை பத்திரிகையான AL Khaleej வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் Thani bin Ahmed Al Zeyoudi சந்திப்பு மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது. இரு தரப்பிலும் பொருளாதார மற்றும் வணிக வாய்ப்புகளில் கூட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக AL Khaleej பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஒத்துழைப்பானது, உலக அளவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான பரந்த வாய்ப்புகளை ஏற்படுத்து வதாகவும் AL Khaleej பத்திரிகை கூறியுள்ளது. இந்த சந்திப்பின்போது விவசாயம் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் AL Khaleej பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதேபோல், துபாயில் இருந்து வெளியாகும் மலையாளப் பத்திரிகைகளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை பாராட்டி முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை பாராட்டி மீடியா ஒன் உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: “ரூ.2,600 கோடி முதலீடு.. 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு” : துபாய் பயணத்தில் சாதித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!