Tamilnadu
‘பேரறிஞர் - கலைஞர் - தளபதி Coat போட்டு பார்த்தது இல்லையே’ : இடம் மட்டுமல்ல உடையும் எங்கள் உரிமைதான் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்தப் பயணத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான உடையான வேட்டி, சட்டை அணிந்து செல்லாமல், கோட் சூட்டுடன் சென்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் வெளிநாட்டு பயணத்தின்போது கோட் ஷூட் அணிந்து செல்வது முதல்முறை அல்ல. ஆனால், முன்னாள் முதலமைச்சர்கள் சி.ராஜகோபாலசாரி மற்றும் காமராஜர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது தமிழ்நாட்டில் தாங்கள் என்ன ஆடை அணிந்தார்களோ அதே ஆடையைதான் வெளிநாடுகளிலும் அணிந்து சென்றார்கள்.
ஆனால், இந்த நடைமுறையை மாற்றியவர் பேரறிஞர் அண்ணாதான். அதன்பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரும் கோட் சூட்டுடன் பயணம் செய்துள்ளனர். தி.மு.க. ஆட்சியைக் கைபற்றிய பிறகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, வெளிநாடுகளுக்குச் சென்றபோது கோட் சூட் அணிந்துக்கொண்டு டாப்பர் லுக்கை தேர்வு செய்தார்.
அதில், 1968ல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, கழுத்தில் டையுடன் கூடிய கோட் சூட் அணிந்திருந்தார் பேரறிஞர் அண்ணா. அதனைத் தொடர்ந்து 1970ல் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்காக பாரிஸ் சென்றபோதும், பின்னர் வாடிகனில் போப்பை சந்தித்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் கோட் சூட் உடையே தேர்வு செய்தார்.
அதுமட்டுமல்லாது, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய அவரது மூன்று வார சுற்றுப்பயணத்தின் போது, கலைஞர் கோட் சூட் அணிந்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட்டுடன் துபாயில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!