Tamilnadu
15 வருஷமா இதுதான் இந்த டெல்லி கும்பலின் வேலை.. நம்பி ஏமாறாதீங்க மக்களே.. அரியலூரில் நடந்தது என்ன?
அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க முன்பணமாக 40 லட்சம் ரூபாயும், மாத வாடகையாக 40 ஆயிரம் ரூபாயும் தருவதாக குறிப்பிட்டு குறுஞ்செய்தி செய்தி வந்திருக்கிறது.
இதனை நம்பி ராஜேந்திரனும் அந்த எண்ணை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அதன் பிறகு கடந்த 2018 ஜனவரி 29ம் தேதி முதல் 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி வரையில் 23 லட்சத்து 98 ஆயிரத்து 900-ஐ கொடுத்திருக்கிறார்.
ஆனால், செல்போன் டவர் அமைப்பது தொடர்பாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாததால் தன்னிடம் இருந்து பெரும்தொகையை மோசடி செய்து ஏமாற்றி பெற்றுவிட்டதாக கடந்த 14.05.2021 அன்று அரியலூர் சைபர் கிரைம் போலிஸாரிடம் ராஜேந்திரன் புகார் கொடுத்திருக்கிறார்.
அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது கணக்கில் இருந்த 9 லட்சத்து 33,745ஐ போலிஸார் முடக்கியிருக்கிறார்கள். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டெல்லியில் இருந்தபடியே கும்பல் ஒன்று அரியலூரில் இருக்கும் ராஜேந்திரனிடம் நூதன முறையின் மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பின்னர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் ஆகியோரது உத்தரவின் பேரில் மோசடி கும்பலை பிடிக்க அரியலூர் சைபர் க்ரைம் உள்ளிட்ட தனிக்குழு டெல்லிக்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பிறகு மருதுபாண்டியன், ராஜேஷ், முருகேசன், ராஜ்கிஷன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 லேப்டாப், 42 செல்போன்கள், 18 சிம்கார்டு, 7 வங்கி கணக்கு புத்தகம், 19 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த மோசடி கும்பல் சுமார் 15 ஆண்டுகளாக டெல்லியில் இருந்து ஆன்லைன் வழியாக செல்போன் டவர் அமைப்பது, ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவது, கடன் கொடுப்பது என பற்பல ஆசை வார்த்தைகளை கூறி பணம் பறிப்பதையே தொழிலாக வைத்திருந்து செயல்பட்டிருக்கிறார்கள்.
அரியலூர் ராஜேந்திரனை போன்று தமிழகத்தில் உள்ள வேறு எவரிடமாவது இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மோசடி வார்த்தை கூறி வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு நடந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?