Tamilnadu
பழங்குடியினர் பாதுகாப்பு : நாடாளுமன்றத்தில் ஆ.ராசா MP எழுப்பிய கேள்வி - ஒன்றிய அரசு அளித்த பதில் என்ன?
வன உரிமைகள் சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள குறிப்பாக மிகவும் பலவீனமான பழங்குடியினருக்கான வாழ்விட உரிமைகள் குறித்த வழிகாட்டி நெறிகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு குறித்து மக்களவையில் கழகக் கொறடா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணை அமைச்சர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் ஒன்றிய முன்னாள் அமைச்சரும், கழகக் கொறடாவுமான ஆ.இராசா 21.03.2022 அன்று எழுப்பிய கேள்வி வருமாறு:-
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட கேள்விக்குப் பதில் அளிப்பாரா?
(அ) குறிப்பாகப் பல வீனமான பழங்குடி குழுக்களுக்கு வன உரிமைகள் சட்டத்தில் உத்தரவாத மளிக்கப்பட்டுள்ள வாழ்விட உரிமைகளுக்கான வழிகாட்டி நெறிகளை உருவாக்குவதற்காக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளதா?
(ஆ) அவ்வாறானால் அது அமைக்கப்பட்ட தேதி மற்றும் குழுவின் அமைப்பு பற்றிய விபரங்களைத் தெரிவிக்கவும்.
(இ) அந்தக் குழுவில் குறிப்பாக பலவீனமான பழங்குடி குழுக்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு அளித்த பதில் வருமாறு:-
(அ) முதல் (இ) வரை: பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் 21.2.2020 அன்று 2006 ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் சமுதாய உரிமைகளை வழங்கு வதற்கும் அதன் மேம்பாட்டுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் பழங்குடியினர் நலத்துறை முன்னாள் செயலாளர் ஹிருஷிகேஷ் பாண்டா தலைமையில் வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
குழுவின் அமைப்பு இணைப்பு 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு இரண்டு துணைக்குழுக்களைக் கொண்டுள்ளது. அவர்கள் (1) குறிப்பாக பலவீனமான பழங்குடியினர் குழுக்களுக்கான வாழ்விட உரிமைகள் மீதும் (2) காலத்துக்கு ஏற்ற வளங்கள் நாடோடி மற்றும் இடையர்கள் சமுதாயத்துக்கான வளங்களை அமையச் செய்வதற்குமான வழி வகைகள்பற்றியும் முன்னிறுத்திச் செயல்படும். இந்த துணைக்குழுக்கள் பற்றிய விபரங்கள் இணைப்பு I மற்றும் இணைப்பு IIல் கொடுக்கப்பட்டுள்ளன.
இணைப்பு : I குறிப்பிடத்தக்க பல வீனமான பழங்குடி இனக்குழுக்களின் உரிமைகளுக்கான வழிகாட்டி நெறிகாரிகளை உருவாக்கும்.
குழுவின் அமைப்பு விவரம்:
* ஹிருகேஷ் பாண்டா - பழங்குடியினர் நலத்துறை முன்னாள் செயலாளர் - தலைவர்.
சம்பந்தப்பட்ட குழுவின் தலைவர் / இயக்குநர் (எஃப்.ஆர்.ஏ.) (எம்.ஒ.டி-ஏ) - உறுப்பினர்.
* ஜே.பி.டுவிட் ஐ.ஏ. எஸ். (ஓய்வு) - உறுப்பினர்
* அருண் யுரோவன் ஐ.பி.எஸ். (ஓய்வு) - உறுப்பினர்
* எட்வாமுண்டா ஐ.ஆர்.எஸ் (ஓய்வு) - உறுப்பினர்
* மதுசரின் - சுயேட்சை ஆராய்ச்சியாளர் - உறுப்பினர்
* நரேஷ் பிஸ்வாஸ் - சுயேட்சை ஆராய்ச்சியாளர் - உறுப்பினர்
* அஜய் டோல்கே, ஹிருஜன் - உறுப்பினர்
* டாக்டர். உ.சே. அமிதாப் பச்சன், கேரளா - உறுப் பினர்
* ரமேஷ் பட்டி இடையர்களுக்கான மையம் - உறுப்பினர்
* ஹிம்தாரா, இமாச்சலப்பிரதேசம் - உறுப்பினர்.
* ஒய்.கிரி ராவ் இயக்குநர், வசுந்தாரா - உறுப்பினர்.
* சத்ய ஸ்ரீவஸ்தவா கிராமப்புற நகர்ப்புறம் மற்றும் பழங்குடி முயற்சி களுக்கான சமூகம் புதுடெல்லி - உறுப்பினர்.
* சுதிர்பால், சி.இ.ஒ. மன்தான், யுவசமஸ்தான் ஜார்கண்ட் - உறுப்பினர் மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், மத்தியப் பிரதேசம் - உறுப்பினர்
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை, முதன்மைச் செயலாளர், சத்தீஸ்கர் - உறுப்பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை, முதன்மைச் செயலாளர், ஆந்திரப் பிரதேசம் - உறுப்பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், சத்தீஸ்கர் - உறுப் பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், மணிப்பூர் - உறுப்பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், மணிப்பூர் - உறுப் பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், இமாசலப் பிரதேசம் - உறுப்பினர்.
* நில பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், கர்நாடகா - உறுப்பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், அருணாச்சல பிரதேசம் - உறுப்பினர்.
* மாநில பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர், ராஜஸ்தான் - உறுப்பினர்.
* இணைச் செயலாளர் நிலையில் சமூக நீதி அமைச்சகப் பிரதிநிதி - உறுப்பினர்.
* இணைச் செயலாளர் நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகப் பிரதிநிதி உறுப்பினர்.
* இணைச் செயலாளர் நிலையில் ஆந்த்ரோபோலோஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் பிரதிநிதி - உறுப்பினர்.
* இணைச் செயலாளர் நிலையில் நில வளங்கள் துறைப் பிரதிநிதி - உறுப்பினர்.
* சுற்றுச்சூழல், வளம் மற்றும் வானிலை மாற்றுத் துறை அமைச்சகப் பிரதிநிதி இணைச் செயலாளர் நிலையில் - உறுப்பினர்.
இத்துடன் இரண்டு துணைக் குழுக்களின் பட்டியலும் இணைப்பு I மற்றும் IIல் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் பிஸ் வேஸ்வர் டுடு பதிலளித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!