Tamilnadu

பட்டப்பகலில் செயின் பறிப்பு; நடந்து சென்ற மூதாட்டியிடம் கைவரிசையை காட்டிய குற்றவாளி பிடிபட்டது எப்படி?

சென்னை கொண்டித்தோப்பு ஜிந்தாசாகிப் தெருவில் வசித்து வருபவர் 59 வயதான ரத்னா தேவி என்ற மூதாட்டி.

இவர் கடந்த மாச்ர் 17ம் தேதியன்று மதியம் 1.10 மணியளவில் ஏழுகிணறு பகுதியில் உள்ள பெத்து நாயக்கன் தெரு வழியே நடந்து சென்றுக் கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ரத்னா தேவியின் கழுத்தியில் அணிந்திருந்த 1 1/4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் ரத்னா தேவி புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதன்படி மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது மண்ணடியைச் சேர்ந்த முகமது ஃபைசல் (22) என்ற இளைஞன் என தெரிய வந்தது. இதனையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஃபைசலை கைது செய்து அவரிடமிருந்து மூதாட்டியின் ஒன்றேகால் சவரன் தங்கச் செயின் மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட முகமது ஃபைசல் மீது ஏற்கெனவே கொரட்டூர் காவல் நிலையட்தில் இதேபோன்ற சங்கிலி பறிப்பு வழக்கு உள்ளது தெரிய வந்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முகமது ஃபைசலை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Also Read: பாரம் தாங்காமல் சரிந்த கால்பந்து மைதான கேலரி; 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்; கேரளாவில் பகீர் சம்பவம்!