Tamilnadu

விடியற்காலையில் தவறாது நடைபயிற்சி செல்லும் பெண் காட்டு யானை !

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட குந்தலாடி, நெல்லியாளம், வாழவயில் போன்ற கிராமங்களில் இரவு நேரத்தில் தேயிலைத் தோட்டப் பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை பெண் காட்டு யானை ஒன்று சாலை வழியாக நடந்து சென்று குடியிருப்புப் பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை போன்ற பயிர்களை சாப்பிட்டு இரவு முழுவதும் குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.

அவ்வாறு முகாமிட்டுள்ள அந்த காட்டு யானை காலை விடிந்தவுடன் மேற்குறிப்பிட்ட மூன்று கிராமங்களை சாலையிலேயே நடைப்பயிற்சி செய்வது போல கடந்து மீண்டும் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று விடுகிறது.

இவ்வாறு கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளில் நுழைவதும், காலை விடிந்தவுடன் வாக்கிங் செய்தபடியே சாலையில் நடந்து சென்று மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் செல்வதும் தொடர் கதையாக கொண்டிருக்கிறது.

அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வனத்துறையினர் அந்த பெண் யானையின் நடமாட்டத்தை தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Also Read: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்.. வனப்பகுதியில் சவாரி சென்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானை !