Tamilnadu

பத்தாண்டுகளுக்குப் பிறகு எந்த வித புகழ்ச்சி.. வீண் பேச்சு இல்லாத சிறந்த பட்ஜெட் : இதுதான் தி.மு.க ஸ்டைல்!

தமிழ்நாடு அரசின் 2022 - 2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தனர். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். ஆட்சி பொறுப்பேற்ற கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.கவின் பட்ஜெட்டால் எந்தவித வளர்ச்சியையும் தமிழ்நாடு அடையவில்லை என அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில், திராவிட மாடல் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த தி.மு.க அரசு, அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பட்ஜெட் அமையும் படி நிதி நிலை அறிக்கையை தயார் செய்திருக்கிறது.

குறிப்பாக கல்வித்துறை, சமூக நீதித் திட்டங்கள், சமயம் சார்ந்த திட்டங்கள், பெண்கள், தொழில் வளர்ச்சி என பல முணைகளில் ஆராய்ந்து பட்ஜெட் அறிக்கையை உருவாக்கியுள்ளது தி.மு.க அரசு. அதேவேளையில், கடந்த அ.தி.மு.க காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை பார்த்தோமானல், பல முக்கிய திட்டங்களுக்கு குறைவான நிதியையும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காத நிலைமையும் இருந்துவந்தது.

அதுமட்டுமல்லாது அ.தி.மு.க ஆட்சியாளர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில், வெற்று அறிவிப்புகளை மட்டுமே அறிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது, கடந்த அதிமுக ஆட்சியின் போது, பட்ஜெட்டில் முதலமைச்சராக இருந்து ஜெயலலிதாவை புகழ்ந்து 10 பக்களுக்கு மேல் பாராட்டு இருக்கும். பட்ஜெட்டில் திட்டங்களை சொல்வதைவிட, அம்மா.. அம்மா என்ற வார்த்தையே அதிகம் இடம்பெற்றிருக்கும். அதிமுகவின் இத்தகைய துதிப்பாடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையான திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு அதற்கான நீதியை ஒதுக்கியுள்ளது கழக அரசு. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை வைத்து எந்தவொரு துதிபாடலும் இடம்பெறாமல் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த பட்ஜெட் எந்தவித வீண் பேச்சுகளோ அல்லது புகழ்ச்சியோ இல்லாத சிறந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘திராவிட மாடல் வளர்ச்சி’: அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள்.. தமிழக பட்ஜெட் முழு விவரம்!