Tamilnadu

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி திட்டங்களை அறிவித்த திமுக அரசின் பட்ஜெட்: முக்கிய 5 அம்சங்கள் இதோ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இரண்டாவது நிதிநிலை அறிக்கையை (2022 - 2023) நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கல்லூரிகளுக்கு ரூ.1000 கோடி செலவில் சிறப்புத் திட்டம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்போம்.

6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துப் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.

புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும். பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.உயர்கல்வித்துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது,

Also Read: 🔴 Tamil Nadu Budget 2022 Live : நிதி நிலை அறிக்கை தாக்கல் - துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?