Tamilnadu

'ஓ.. இதுதான் பட்ஜெட்டா?’ : PTR தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை பார்த்து வியந்த முன்னாள் நிதியமைச்சர் OPS

தமிழ்நாடு அரசின் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தாக்கல் செய்த முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக அது இருந்தது. இம்முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள முழு பட்ஜெட்டிலும் 'திராவிட மாடல்' ஆட்சியை எடுத்துக்கூறும் வகையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இளைஞர் நலன், மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை, மகளிர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, உயர்கல்வித்துறை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக அது அமைந்துள்ளது.

தி.மு.க அரசின் இந்த பட்ஜெட்டை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த முழு பட்ஜெட்டையும் நிதியமைச்சர் வாசித்து முடித்தவுடன் இதன் சுருக்கத்தையும் ஆங்கிலத்தில் வாசித்தார். இதைப்பார்த்து அவையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆச்சரியப்பட்ட அவரை பாராட்டினர்.

பட்ஜெட் உரை துவங்குவதற்கு முன்பு, வேண்டும் என்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு குழப்பத்தை ஏற்படுத்தி முயன்றனர். உடனே சபாநாயகர் குறுக்கிட்டு அவர்களைக் கண்டித்தார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கு இது கூட தெரியாதா? இதுதான் அவை மரபா என கடுமையாக கண்டித்தார். இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

2011 - 2021 வரை அ.தி.மு.க ஆட்சியில் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். இவர் இருந்த காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைப் பாராட்டியே பாதிக்குமேல் பட்ஜெட் உரையில் இருக்கும்.

ஆனால், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து ஒரு வரி கூட இல்லாததையும், ஒரு பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பார்த்து முன்னாள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியந்துள்ளார்.

Also Read: பத்தாண்டுகளுக்குப் பிறகு எந்த வித புகழ்ச்சி.. வீண் பேச்சு இல்லாத சிறந்த பட்ஜெட் : இதுதான் தி.மு.க ஸ்டைல்!