Tamilnadu
‘போன ரெய்டுக்கு பிரியாணி போடாம ஏமாத்திட்டாரு.. இந்த முறை கிடைக்கும்’: வேலுமணி வீட்டில் தொண்டர்கள் பேச்சு!
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில் மீண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியனர்.
மேலும் கணக்கில் வராத ரூ. 13 லட்சம், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று காலையிலிருந்தே எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாகச் சென்னையில் மட்டும் 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.58.23 கோடிக்கு அதிகமாகச் சொத்துக்களை சேர்த்திருப்பதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க அமைச்சர்களின் வீட்டுகளில் ரெய்டு என்றால் அக்கட்சி தொண்டர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்ற பெயரில் காலையிலேயே அமைச்சரின் வீடுகளின் முன்பு குவிந்துவிடுவார்கள். அமைச்சருக்கு ஆதாரவாக கூச்சலிட்டுவதும், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பதுமே அவர்களின் வாடிக்கையாகவிட்டது.
போலிஸார் எவ்வளவு சொல்லியும் கலைந்துபோக மறுக்கும் அந்த கும்பலுக்கு தேவையான வசதிகளை முன்னாள் அமைச்சர் செய்துக்கொடுப்பார். குறிப்பாக கடந்த முறை எஸ்.பி வேலுமணி வீட்டில் குவிந்த தொண்டர்களுக்கு காலை இட்லி, வெண் பொங்கல், தோசை, உப்புமாவும் மதியம் எலுமிச்சை சாதம், வெஜ் பிரியாணியும் அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள். இதுபோக எனர்ஜியாக இருப்பதற்காக அவ்வப்போது ரோஸ் மில்க்கும் வழங்கப்பட்டது.
அதன்படி தற்போதும் ரெய்டைக் கண்டித்து போராட்டத்தில் குபீர் என்று குதித்துள்ள தொண்டர்களுக்கு வழக்கும்போல, டீ, காபி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் காலை உணவு தயார் செய்து கொடுக்கவிருப்பதாகவும் அங்கிருந்து வந்த தகவல் மூலம் கிடைத்துள்ளது.
மேலும் மதிய உணவிற்கு என்னவகையான உணவு கொடுப்பார்கள் எனவும், ‘போன ரெய்டுக்கு வேலு அண்ணன் பிரியாணி போடாம ஏமாத்திட்டாரு.. இந்த ரெய்டுக்கு கண்டிப்பா கிடைக்கும்’ என தொண்டர்களே தங்களுக்குள் பேசி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் மூலம் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது, ரெய்டு நடைபெறும் இடத்தையே பிக்னிக் ஸ்பாட் போல அ.தி.மு.கவினர் மாற்றிவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!