Tamilnadu

திடீரென நின்ற lift.. அபாயகுரல் எழுப்பிய 14 பேர்: இரவில் பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்!

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நேற்று இரவு ரயில் நிலையத்தில் உள்ள லிப்டை பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் 5 பெண்கள், ஒரு ஒன்றரை வயது கை குழந்தை உட்பட 14 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பாதியிலேயே நின்றுள்ளது. மேலும் லிப்டில் இருந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்தவர்கள் அபாயக்குரல் எழுப்பியுள்ளனர். உடனே இது குறித்து ரயில்வே போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு விரைந்து வந்த ரயில்வே போலிஸார் லிப்ட் இரண்டு தளங்களுக்கு இடையில் பாதியிலேயே சிக்கி இருப்பதைக் கண்டனர். அரை மணி நேரத்தில் லிப்ட் பொறியாளர் வரவழைக்கப்பட்டு லிப்டை இயக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் லிப்ட்டை இயக்க முடியவில்லை.

இதனால், லிப்டின் மேற்பரப்பில் இருக்கும் மின் விசிறியைக் கழற்றி அந்த வழியாகச் சிக்கியவர்களைத் தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணி கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கத்தில் மின்தூக்கி செயல்படாமல் இரண்டு மணி நேரமாக பயணிகள் சிக்கிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: வாங்கிய பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம்; சதக் சதக் என கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்; ஏனாமில் பயங்கரம்!