Tamilnadu

ரூ.700 கடனை திரும்ப கேட்டதால் நடந்த தகராறு.. கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம் - ‘காப்பு’ மாட்டிய போலிஸ்!

திருப்பத்தூர் மாவட்டம், வக்கணம்பட்டி காமராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளியான இவர் காந்திராஜன் என்பவருக்கு 700 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 5ம் தேதி ஜோலார்பேட்டையில் சகாந்திராஜனை சந்தித்த ராஜ்குமார் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது ஒருகட்டத்தில் மோதலாக மாறியதால், ஆத்திரமடைந்த காந்திராஜன் சாலையிலிருந்த சட்டையை கடுத்து ராஜ்குமாரின் தலையில் ஓங்கியடித்துள்ளார். இதில் அவரது தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ராஜ்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். பின்னர் இது குறித்து ராஜ்குமார் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து காந்திராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடனை திருப்பி கேட்டவரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”மீதி பணத்தையும், கேட்ட நகையும் கொடுத்தால் தாலி கட்டுவேன்” - மணமேடையில் வைத்து மிரட்டிய பீகார் மணமகன்!