Tamilnadu
’டான்ஸ் கத்துக்க கொரியா போறேன்’ - சென்னை சின்னமலையில் காத்திருந்த சிறுமி மீட்கப்பட்டது எப்படி?
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார் 14 வயது சிறுமி. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டதால் அதற்காக அவருக்கென தனி ஸ்மார்ட் போனை பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.
வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் அந்த சிறுமி. நடனத்தின் மீது நாட்டம் கொண்ட சிறுமி கொரியா நடனத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
இதனால் பெற்றோரிடம் கொரியா நடனத்தில் சேர்த்துவிடும்படி கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் மறுத்ததால் வருத்தத்திற்குள்ளான சிறுமி நேற்று காலை சுமார் 7.45 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
மகள் வீட்டில் இல்லாதை அறிந்த பெற்றோர் சிறுமியின் அறையில் பார்த்தபோது அங்கிருந்து சில துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து மகளின் ஃபோனுக்கு கால் செய்து கேட்ட போது, “தான் கொரியா டான்ஸ் கற்றுக்கொள்ள கொரியாவுக்கு செல்கிறேன். என்னை தேட வேண்டாம்” எனச் சொல்லி காலை துண்டித்திருக்கிறார்.
இதனையடுத்து மடிப்பாக்கம் போலிஸாரை நாடி சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள். இதனையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டதோடு சிறுமியின் போட்டோவை அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பி கண்காணிக்கச் செய்திருக்கிறார்கள்.
மேலும், சிறுமியிடம் இருந்த செல்போன் எண்ணை வைத்து அவரை ட்ரேஸ் செய்த போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை பேருந்து நிலையத்தில் அச்சிறுமி இருந்தது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து அங்குச் சென்று சிறுமியை மீட்ட போலிஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்ததில் நடனத்தின் மீதான ஆவலில் இவ்வாறு செய்திருப்பதும், இதற்காக இன்ஸ்டாகிராமில் பல பக்கங்களையும் அவர் பின் தொடர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனிடையே புகார் வந்த இரண்டே மணிநேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை போலிஸார் மீட்டுள்ளனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!