Tamilnadu
நீலகிரி தேயிலையை விரும்பும் ரஷ்ய - உக்ரைன் மக்கள்.. ‘4 கோடி கிலோ’ தேயிலை ஏற்றுமதி தேக்கம் : பகீர் தகவல் !
ரஷ்ய, உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் இருந்து 40 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 18 முதல் 20 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி ரஷ்யாவிற்கும்,10 மில்லியன் கிலோ உக்ரைனிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தேயிலை வர்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 40 மில்லியன் கிலோ தேயிலைகள் ரஷ்யாவிற்கும், இதேபோன்று 15 மில்லியன் கிலோ உக்ரைனிற்கும் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் 40 சதவீதம் வரை நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வர்த்தகம் அமெரிக்க டாலரில் நடைபெற்று வந்தது, தற்போது ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதாலும், உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தேயிலை ஏற்றுமதி நடப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதன் காரணமாக ரஷ்யாவின் கரன்சியான ரூபல் மூலம் வர்த்தகத்தை தொடங்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் ரஷ்யாவிடம் இருந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்களை ரூபல் மூலம் பெற்று அதற்கு ஈடாக தேயிலைகளை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் இந்திய வர்தக அமைப்பு ஈடுபட்டுவருவதாகவும் இப்பணிகள் விரைந்து முடிந்தால் ஏற்றுமதிக்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் என்று தேயிலை வர்த்தக நிபுணர் தெரிவித்தார்.
தென்னிந்தியாவில் இருந்து அதிகபட்சமாக ஆர்த்தோடக்ஸ் தேயிலைகள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் சிடிசி ரக தேயிலையினை அதிகளவு ரஷ்ய மக்கள் விரும்புவதால் இவை தற்போது ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டு வருவதால், போர் தொடரும் பட்சத்தில் தேயிலை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டு நீலகிரி பொருளாதாரத்தில் அதன் பாதிப்பு இருக்கும் என்று தேயிலை வர்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?