Tamilnadu
20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு.. 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான மேயர், துணை மேயர்; நகராட்சித் தலைவர், துணைத் தலைவர்; பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
அதன்படி இன்று நடந்த மறைமுக தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் துணை மேயர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
1. சென்னை மாநகராட்சி துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தி.மு.க வேட்பாளர் மகேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்!
2. தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் ஜெனிட்டா செல்வராஜ் போட்டியின்றி தேர்வு!
3. கரூர் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் சரவணன் போட்டியின்றி தேர்வு!
4. வேலூர் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் சுனில் போட்டியின்றி தேர்வு!
5. கோவை மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் வெற்றிச்செல்வன் போட்டியின்றி தேர்வு!
6. தாம்பரம் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் காமராஜ் போட்டியின்றி தேர்வு!
7. திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் இராஜப்பா போட்டியின்றி தேர்வு!
8. நெல்லை மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் கே.ஆர்.ராஜூ போட்டியின்றி தேர்வு!
9. திருச்சி மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் திவ்யா தனக்கோடி போட்டியின்றி தேர்வு!
10. ஈரோடு மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் செல்வராஜ் போட்டியின்றி தேர்வு!
11. கும்பகோணம் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் தமிழழகன் தேர்வு!
12. தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் அஞ்சுகம் பூபதி போட்டியின்றி தேர்வு!
13. சிவகாசி மாநகராட்சி துணை மேயராக தி.மு.க வேட்பாளர் விக்னேஷ் பிரியா போட்டியின்றி தேர்வு!
14. நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மேரி பிரின்சி வெற்றி!
15. ஓசூர் மாநகராட்சியின் துணை மேயர் தேர்தலில் திமுகவின் ஆனந்தைய்யா வெற்றி.
16. ஆவடி மாநகராட்சி துணை மேயராக ம.தி.மு.க வேட்பாளர் சூரியகுமார் போட்டியின்றி தேர்வு!
17. கடலூர் மாநகராட்சி துணை மேயராக வி.சி.க வேட்பாளர் கிஷோர் போட்டியின்றி தேர்வு!
18. காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரஸ் வேட்பாளர் குமர குருநாதன் போட்டியின்றி தேர்வு!
19. திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக சி.பி.ஐ வேட்பாளர் பாலசுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு!
20. மதுரை மாநகராட்சி துணை மேயராக சி.பி.ஐ.எம் வேட்பாளர் நாகராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
21. சேலம் மாநகராட்சியின் துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவி போட்டியின்றி தேர்வு.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!