Tamilnadu

“உதவி கேட்டது தப்பா போச்சு”.. பா.ஜ.க-வால் கவலைக்குள்ளான உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் - நடந்தது என்ன?

உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய படையினர் தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த மீட்புப்பணிகளை வைத்துக் கொண்டு பா.ஜ.க கட்சியினர் அரசியல் செய்து கொண்டுவருகிறார்கள். மேலும் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு வேகமாக செயல்பட வேண்டும் என மாநில அரசுகள் அழுத்தம் கொடுத்துள்ளது.

உக்ரைனில் சிக்கிய தமிழ்நாட்டு மாணவரை மீட்டு தாயம் அழைத்து வந்து விட்டதாக கூறி பா.ஜ.க-வினர் பொய்யாகப் பிரச்சாரம் செய்துள்ளனர். இதைப்பார்த்த சம்மந்தப்பட்ட மாணவர் இது குறித்து சமூகவலைத்தளத்தில் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவர் வெளியிட்டுள்ள பதிவில்,"நாங்கள் இன்னும் ரோமானிய நாட்டில் தான் உள்ளோம். ஏன் இந்த மாதிரி பதிவு செய்து அரசியல் செய்றீங்க? பேருந்தும் வரல, விமானம் வரவில்லை, உதவி செய்த மாதிரி கட்டி கொண்டு, எப்புடி நீங்க பதிவு செய்றீங்க. உதவி கேட்டது தப்பா போச்சு

1 பதிவு - நான் அண்ணாமலை மற்றும் வனிதா அவர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவு செய்து இருந்தேன். அதற்கு காரணம் நான் உதவி கேட்டு பதிவு செய்த உடன் என்ன ஏது என்று தகவலை உடனே கேட்டு அறிந்து உதவி செய்கிறோம் என்று கூறினார்கள்..!

2 பதிவு - 5 மணிக்கு பேருந்து வருவதாக அழைப்பு வந்தது. ஆனால் அதே சமயம் விமானம் ரத்து ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள்!

நான் செய்த பதிவை யாரோ ஒருவர் அதை பகிர்ந்து நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டோம் என்றும் டிவிட்டரில் பதிவு செய்து இருக்கிறார்கள்

ஒன்னே ஒன்று கேட்கணும் இந்த போர் காலம் மாணவர்கள் உயிர் சமந்தப்பட்ட விசயம் இதில் கூட இப்பிடி அரசியல் ஆதாயம் தேடி என்ன பயன் உங்களுக்கு? தேவை செஞ்சி கேட்கிறேன் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை இவரு என்னை மற்றும் அரசாங்கத்தை நம்பி இருக்கும் மாணவர்கள் வாழ்க்கை வைத்து அரசியல் செய்யாதீர்கள் இது உங்களுக்கு தான் பாவம் செரும்..

உங்களால் தான் இவளோ பெரிய அரசியல் விளையாட்டு நடந்து கொண்டு இருக்கிறது தேவைசெய்து உதவி செய்ய முடியவில்லை என்றாலும் சந்தோசம் இப்படி அரசியல் அதையாம் வேண்டாம் இது மாணவர்களின் வாழ்க்கை உங்களை தொடர்பு கொண்டது எனது தப்பு ரொம்ப சந்தோசம் நன்றி !!" என்ற தெரிவித்துள்ளார்.

Also Read: “உக்ரைன்ல இருந்து வந்ததும் இதை கொடுக்குறாங்க.. இதைவச்சு என்னங்க செய்றது?” : மோடி அரசை விமர்சித்த மாணவர்!