Tamilnadu
மதுகுடிக்கவே சைக்கிள் திருடனாக மாறிய வாலிபர்.. போலிஸில் சிக்கியது எப்படி?
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது விலை உயர்ந்த சைக்கிகள் கடந்த மாதம் திருடுபோனது. இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், அபிராமபுரம் ஆகிய பகுதிகளிலும் விலை உயர்ந்த சைக்கிள்கள் திருடுபோனது குறித்து புகார்கள் வந்துள்ளன.
இதனால் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.மேலும் திருடுபோன இடங்களிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர். அதில் இளைஞர் ஒருவர் சைக்கிளைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.இதைக்கொண்டு அந்த மர்ம நபரை போலிஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில் சூளைப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இவரது பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டனர்.
இதனால் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீட்டை விற்கு தனது சகோதரிக்கு பாதி பங்கு பணத்தை சரவணன் கொடுத்துள்ளார். பின்னர் தனது பங்கில் கிடைத்த பணத்தைக் கொண்டு தொழில் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், அந்தப் பணத்தைக் குடித்தே தீர்த்துள்ளார். இதனால் உணவகங்கள் உள்ளிட்டபல இடங்களில் வேலைபார்த்து வந்துள்ளார்.இதையடுத்து மதுக்குடிப்பதற்காககவே விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிவந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் எந்தஎந்த இடங்களில் சைக்கிகள் திருடியுள்ளார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
'ஜெய் ஸ்ரீராம்' கோசமெழுப்ப மறுத்த பெண் : மருத்துவமனையில் மறுக்கப்பட்ட உணவு : வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
-
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம்! : இந்தியா கூட்டணி அறிவிப்பு!
-
மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர்: 25 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவு !
-
நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையான சிவகாசி பட்டாசு... வணிகர்கள் கூட்டமைப்பு மகிழ்ச்சி!
-
இந்தியா - சீனா எல்லையில் இனிப்பு பரிமாற்றம்!