Tamilnadu
உக்ரைன் - ரஷ்யா போர் : “இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்” - ‘SBI’ அதிர்ச்சி தகவல்!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன்தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
குறிப்பாக, அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். ரஷ்யா போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் ராணுவம் தரப்பில் 100 பேர், பொதுமக்களில் 30 பேர் இறந்ததாகவும், ரஷ்ய கிளர்ச்சி படையைச்சேர்ந்த 100 பேரை உக்ரைன் ராணுவம் சுட்டுக்கொன் றதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.
இடைவிடாமல் வான் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்ய படைகள் தலைநகர் கீவில் நுழைந்தன. கீவ் நகரின் வடக்கு பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி செல்கின்றன. உக்ரைன் நாட்டின் போர் விமானத்தையும் ரஷ்ய படை சுட்டுவீழ்த்திய தாகவும் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தப்படையால் உக்ரைன் ரஷ்யா இன்று உலக நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தற்போது, உக்ரைன் - ரஷ்யா இடையிலான ராணுவ மோதலால், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இதுதொடர்பாக ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அறிக்கையில், “உக்ரைன் விவகாரத்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை கடந்து விட்டது. அத்துடன் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. எனவே, விலையை கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தால், மாதம் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு குறைக்கப்படும் கலால் வரி அடுத்த நிதியாண்டிலும் தொடர்ந்து, 2023-ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வும் சுமார் 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்தால், 2023 நிதியாண்டில் அரசின் வருவாய் இழப்பு சுமார் ரூ. 95 ஆயிரம் கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடி வரை இருக்கும். ஜனவரி 2022-இல் சில்லரைப் பணவீக்கம் மீண்டும் 6.01 சதவிகித மாக உயர்ந்துள்ளது.
மார்ச் 2022-ல் பணவீக்கம் 4.7 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி (RBI) எதிர் பார்க்கிறது. 2022-23 நிதியாண்டிற்கு, சில்லரை விலைப் பணவீக்கம் 4.5 சதவிகிதமாக இருக்கும் எனவும் ஆர்.பி.ஐ கணித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு உட்பட பல காரணிகளால் பணவீக்கத்திற்கு தலைகீழ் அபாயங்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்த மட்டத்தில் இருந்து 67 சதவிகிதம் வீழ்ச்சியடைய சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று 2018 முதலான முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
விலைமதிப்பற்ற உலோகங்களான தங்கம், பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றிலும் பண வீக்கம் ஏற்படலாம். உக்ரைன் விவசாயப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், கடலில் வழி செலுத்தலில் தொந்தரவு செய்யப்பட்டால் கோதுமை மற்றும் சோளத்தின் விலையிலும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!