Tamilnadu
”எனக்கு முதல்வர் அண்ணன்னா, ராகுல் தம்பி” - உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய சத்யராஜ்!
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையக் கூட்டரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
புத்தகம் வெளியீட்டுக்கு பின்னர் நடிகர் சத்யரா விழா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றியது மெய்சிலிர்க்க வைத்தது. திராவிட கலாசாரப்படி அண்ணன், தம்பி என்றே அழைப்போம். அதன் வகையில் முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்றும் ராகுல் காந்தியை தம்பி என அழைக்கிறேன் என சத்யராஜ் பேசினார்.
இதைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் என்பதை காட்டிலும் காமரேட் அல்லது தோழர் பினராயி விஜயன் என அழைக்க விரும்புவார் என நினைக்கிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு படம் தொடர்பாக சென்றிருந்த போது கேரள முதலமைச்சர் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அப்போது இப்படிப்பட்ட முதல்வர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என ஆதங்கமாக கூறியிருந்தேன். ஆனால் இப்போது சிறந்த முதலமைச்சராக நம் தளபதி இருக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, வைரமுத்து, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவர் குறித்தும் பேசிய சத்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பக்கத்தை படித்தபோதே அவ்வளவு ஆர்வம் தொத்திக்கொண்டது.
முத்தமிழறிஞர் கலைஞரோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. பாலைவன ரோஜாக்கள், மண்ணின் மைந்தன் ஆகிய 2 படங்களில் அவரது வசனத்தில் நடித்திருந்தேன். கடைசிவரை தன் தந்தையை தலைவனாகவே எண்ணி வாழ்ந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக் கூறிய சத்யராஜ் “தந்தை ஒரு தலைவன்” நல்ல டைட்டில்ல எனக் கூறினார்.
பராசக்தி படத்தின் நினைவுகளையும், மிசா காலத்து நிகழ்வுகளையும் நினைவூட்டிய சத்யராஜ், ஒரு நபரை மனிதனாக மாற்றுவது தந்தை பெரியாரின் சமூக நீதியும், காரல் மார்க்ஸின் பொருளாதார நீதியுமே ஆகும் என்றும், நாம் மனிதர்களாக இருக்க வேண்டுமென்றால் மனிதாபிமானம் தேவை எனக் கூறியிருந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!