Tamilnadu
“பிறர் மீதும் காட்டும் அன்பு ஒருவரை என்ன செய்யும்..? எங்கு கொண்டுசெல்லும்..?” : இலக்கணமான சிறுவன் கலாம்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அன்பு மற்றும் மனிதநேயம் குறித்து சென்னையைச் சேர்ந்த சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுவனின் இக்கருத்து தற்போதைய உலகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகவும் உள்ளது.
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அப்துல்கலாம் என்ற சிறுவன் இணைய ஊடகம் ஒன்றில், நாம் யாரையும் பிடிக்காது எனச் சொல்லக் கூடாது. இங்கு அனைவரும் நம்மைப் போன்றவர்கள் தான். சிலருக்கு இங்கு கஷ்டம் இருக்கும். அவர்கள் கஷ்டத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே யாரிடமும் சொல்லாமல் கூட இருப்பார்கள்.
இங்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லக்கூடாது. இங்கு எல்லாரும் நம் நண்பர்கள்தான். என்னைக் கூட எல்லாரும் பல்லன் என்று கூறுவார்கள். இங்கு இருக்கும் எல்லாரும் நமக்கு நண்பர்கள் தான். நம் நாடு ஒற்றுமையான ஒரு நாடு! ஒற்றுமை இல்லாமல் நாம் இருக்கக் கூடாது. இங்கு மனிதநேயம் பரவ வேண்டும். இல்லையென்றால், ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் போல நிறையப் பேர் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே, அங்கு மனிதநேயம் மிக முக்கியம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சின்ன வயதில் இவ்வளவு தெளிவாக மனிதநேயத்தை பற்றி பேசியதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அதேவேளையில் இவர் சிலர் வயிற்றெரிச்சலும் அடைந்துள்ளனர். இதனால்தான் சிறுவன் குடியிருந்த வீட்டை காலி செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பையும், மனிதநேயத்தையும் போதித்த சிறுவன் அப்துல்கலாமை அழைத்துப் பாராட்டினார். மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறுவன் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கவேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று இன்று தலைமைச் செயலகத்தில் சிறுவன் அப்துல்கலாம் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியிருப்பு ஆணையை வழங்கினார். அப்துல்கலாம் சிறுவனுக்கு, தி இந்து தமிழ் திசை பதிப்பகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசளித்தார்.
அன்பு என்ன செய்யும் எனக் கேட்போருக்கு இலக்கணமாக உருவெடுத்துள்ளார் சிறுவன் அப்துல்கலாம்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?