Tamilnadu
ஆசைக்கு இணங்கமறுத்த சிறுமியை கொடூரமாக வன்கொடுமை செய்த காமுகன்:பரபரப்பு தீர்ப்பளித்த சென்னை போக்ஸோ கோர்ட்!
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கருணாகரன், கடந்த 2015-ம் ஆண்டு, சூளை தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
பின், சிறுமி மீது சந்தேகம் அடைந்து மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை சிகரெட்டால் உடலின் பல்வேறு பகுதிகளில் சூடு வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர், கத்தியால் சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கருணாகரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ராஜலட்சுமி, கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனையும், 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனையும் (14 ஆண்டுகள்), கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை, கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு என மொத்தம் 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின்பு கடைசியாக ஆயுள் தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!