Tamilnadu
”பாடத்திட்டத்தை பின்பற்றுவது மாநில அரசின் கொள்கை” சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கில் மனுதாரருக்கு குட்டு!
ஜெ.ஜெ கட்சி என்ற அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகள் இவைகளை எதிர்கொள்ள நுழைவு தேர்வு, தகுதி தேர்வு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வடிவமைக்கும் பாட திட்டத்தின் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் மூலமாக பாட புத்தகம் உருவாக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி பாட புத்தகம் வடிவமைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் இவர்களின் பிள்ளைகளுக்கு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் கல்வியும், அரசுக்கு வரி செலுத்தும் மக்களுக்கு சமச்சீர் கல்வி முறை இருவேறு கல்வியின் காரணமாக சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி குழு வடிவமைப்பும் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதுபோல் அமல்படுத்த முடியுமா ? எதன் அடிப்படையில் மனு அனுப்பப்பட்டுள்ளது ? தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் என்.சி.ஆர்.டி பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு சட்டத்தில் விதிகள் உள்ளது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியவர்கள் அரசின் நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்று கூறி, பின்னர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு