Tamilnadu

பெரம்பலூரில் 100% வெற்றியை ருசித்தது தி.மு.க : எந்தெந்த வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க? முழு விவரம்!

பெரம்பலூர் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 16ல் தி.மு.க. வேட்பாளர்களும், 3ல் அ.தி.மு.க. வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

அரும்பாவூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று, அரும்பாவூர் பேரூராட்சியை தி.மு.க.கைப்பற்றியது.

பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் , தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டிலும், சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்று பூலாம்பாடி பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

( 2 பேர் போட்டியின்றி தேர்ந்துடுக்கப்பட்டுள்ளனர்)

குரும்பலூர் பேரூராட்சியில் மொத்தம்15 வார்டுகளில், 11 தி.மு.க.வேட்பாளர்களும், 3 சுயேட்சை வேட்பாளர்களும், 1 அ.தி.மு.க.வேட்பாளரும் வெற்றி பெற்று, தி.மு.க. இந்த பேரூராட்சியை கைப்பற்றியது.

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில், 10 தி.மு.க. வேட்பாளர்களும், தி.மு.க.கூட்டணி கட்சி 4 வேட்பாளர்களும், 1 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

Also Read: ”தனி மெஜாரிட்டியுடன் கோவில்பட்டி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க” - வெற்றி நிலவரம் இதோ!