Tamilnadu
கோவை இனி தி.மு.கவின் கோட்டை... கோவை மாநகராட்சியின் முதல் தி.மு.க மேயர் ரெடி!
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க முன்னிலை பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க வெற்றி பெற்று வருகிறது.
கோயம்புத்தூர் அ.தி.மு.கவின் கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்த நிலையில், அ.தி.மு.கவை இந்தத் தேர்தலில் பதம் பார்த்துள்ளது தி.மு.க.
கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 31 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கோவையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளவற்றில் 51 வார்டுகளில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாகவே மாநகராட்சியில் பெரும்பான்மைக்கான இடங்களைப் பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சியில் தி.மு.க அதிக வார்டுகளில் வெற்றுபெற்றுள்ளதால் தி.மு.கவைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவையின் முதல் பெண் மேயராகவும், தி.மு.கவின் முதல் கோவை மேயராகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
கோவை மாநகராட்சி மட்டுமல்லாது பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய 7 நகராட்சிகளையும் தி.மு.க முழுமையாக கைப்பற்றியுள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் கோவையை ஒட்டுமொத்தமாக கைப்பற்றியுள்ளது தி.மு.க கூட்டணி!
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்