Tamilnadu

“புத்தகக் கண்காட்சியில் ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் வாங்க விரும்பும் 5 புத்தகங்கள்” : என்ன தெரியுமா ?

ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்தும் வாசகர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை அள்ளிக்கொண்டு செல்வார்கள்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தாமதமாக துவங்கிய 45வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்து, எழுத்தாளர்களுக்குக் கலைஞர் பொற்கிழி விருதை வழங்கினார்.

பிப்.16ம் தேதி துவங்கிய புத்தக கண்காட்சிக்கு வாசகர்கள் படையெடுத்து வருகின்றனர். அதேபோல் சினிமா பிரபலங்களும் புத்தகங்களை வாங்க குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகங்களை வாங்க விரும்புவதாக 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

அந்த புத்தகங்கள் அவை, எந்த பதிப்பில் கிடைக்கும் என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' - ஆசிரியர் : ப.திருமாவேலன். பதிப்பகம் - நற்நினை பதிப்பகம்.

'நானும் நீதிபதி ஆனேன்' - ஆசிரியர் : கே.சந்துரு பதிப்பகம் - அருஞ்சொல் வெளியீடு.

'மாயா வேட்டம்' - ஆசிரியர் : கோகுல் பிரசாத். பதிப்பகம் - தமிழினி பதிப்பகம்.

'மழைக்கன்'. ஆசிரியர் : செந்தில் ஜெகன்நாதன். பதிப்பகம்- வம்சி பதிப்பகம்.

'இப்போது உயிரோடிருக்கிறேன்' - ஆசிரியர் : இமையம், பதிப்பகம் - க்ரியா பதிப்பகம்.

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது.

Also Read: “காந்தியடிகள் முதல் அறியப்படாத தியாகிகள் வரை” : சென்னை பார்வையாளர்களைக் கவர்ந்த புகைப்படக் கண்காட்சி!