Tamilnadu
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - காரில் சென்று வாக்களித்தார் நடிகர் விஜய்” : புதிய அப்டேட்!
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12602 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் தேர்தலில் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது. மேலும் 1.13 லட்சம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் அமைதியான முறையில் தனது வாக்கை செலுத்தி வருகின்றனர். அதேபோல், திருவாரூரில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் மையத்திற்கு நடிகர் விஜய் சிவப்பு காரில் வந்து வாக்களித்தார். விஜய் உடன் அவரது ரசிகர்களும் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்ததால், சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பானது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்