Tamilnadu

“பிளாஸ்டிக் கவரில் இறந்த சிசு.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய மர்மநபர்” : நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனலெட்சுமி (40). இவருக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து அவரது தாயாருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தனலெட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது அவர் கர்ப்பம் தரித்திருப்பது தெரியவந்தது.

கணவரை பிரிந்து வாழும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அவர் கர்ப்பத்திற்கான காரணம் யார் என தெரியவில்லை. இந்நிலையில், மருத்துவமனைக்கு எந்த வித பரிசோதனைக்கும் செல்லாத அவருக்கு கடந்த 12ஆம் தேதி மாலை வீட்டிலேயே பிரசவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று முன்தினம் ரத்தப்போக்கு ஏற்பட்டு தனலெட்சுமி மயங்கிடவே, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று, திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிள்ளனர். இதற்கிடையில், குழந்தை நிலை என்ன என்பது குறித்த விபரம் தெரியாமல் போனதால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறையினர், இதுதொடர்பாக மணப்பாறை போலிஸில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குழந்தை குறை மாதத்தில் பிறந்து இறந்து விட்டதால் புதைத்து விட்டதாக வந்த தகவலை அடுத்து அந்த சிசுவை மீட்டு, பிளாஸ்டிக் கவரில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலிஸார் வழக்கு பதிந்து கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? எனவும் குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: இந்திய நாட்டின் விவசாயத்தை சிதைக்கும் மோடி அரசின் புதிய ஒப்பந்தம்: world bank சதியின் பகீர் பின்னணி என்ன?