Tamilnadu

2 ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு.. மாணவர்களை மகிழ்ச்சியாக வரவேற்ற ஆசிரியர்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அண்மையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது அடுத்து இன்று முதல் மழலையர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை தொடக்க பள்ளியில் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பள்ளிக்கு வந்த குழந்தைகளை பள்ளி வளாகத்தின் முகப்பில் ஆசிரியர்கள் பூக்களை கொடுத்து வரவேற்றனர். பெற்றோர்களும் ஆர்வம் குறையாமல் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

அதேபோல், அனைத்து மாணவ, மாணவிகள், குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சானிடைசர் தெளிக்கப்பட்டும், உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி வழிகாட்டு நெறிமுறைகளை உடன், பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை பின்பற்றி ஆசிரியர்கள் குழந்தைகளை வரவேற்றனர்.

Also Read: கூடுதல் தளர்வுகளுடன் மார்ச் 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு- நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி: முதலமைச்சர் உத்தரவு!