Tamilnadu
பள்ளி மாணவன் தற்கொலை.. போலிஸாரிடம் சிக்கிய கடிதம்: நடந்தது என்ன?
சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சவுண். இவரது மகன் ஆருஷ். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் இருந்து சிறுவன் ஆருஷ் காணவில்லை. இதையடுத்து சிறுவனை தேடி பார்த்தபோது, அவர் தங்கியிருந்த அடிக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தைப் பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிறுவன் வீட்டில் போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது தற்கொலைக்கு முன்பு ஆருஷ் எழுதிய கடிதத்தை போலிஸார் கைப்பற்றினர். அதில்,"மன அழுத்தம் அதிகமாக உள்ளதால் என்னால் இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை. என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்" என கூறப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவன் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!