Tamilnadu

நீட் விலக்கு மசோதா: பெரிய அண்ணன் போக்கில் ஆளுநர் செயல்படக்கூடாது - Indian Express தலையங்கம் விமர்சனம்!

தமிழ்நாடு ஆளுநர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தக் கூடாது. அவ்வாறு செய்வது எல்லை மீறும் ஐயத்தை ஏற்படுத்தும் என்ற தலைப்பில் நேற்றைய (10.02.2022) "இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளேட்டின் டெல்லி பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

”ஆளுநரின் தகாத விமர்சனம் மற்றும் அவருடைய "பெரிய அண்ணன்" மனப்பான்மையின் காரணமாகவும் தமிழ்நாடு அரசு வேதனை அடைந்திருப்பது முற்றிலும் அடிப்படை இல்லாதது அல்ல. தமிழ்நாடு அரசு தமது வாக்குறுதியான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ("நீட்” தேர்வை) ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் உறுதியாக நிற்கிறது. மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை "நீட்’’ தேர்வின் மூலம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த சட்டமுன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய பின் ஒரு வாரத்திற்குள்ளாக, தமிழ்நாடு சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, சட்டப் பேரவையிலேயே முதல்முறையாக அதே சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றியுள்ளது.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன்னுடைய விருப்பத்தின்படி சட்ட முன் வடிவை ஆளுநருக்கு அனுப்ப முடியும் என்பதற்கு வலுவான அறிகுறியாகும். சட்ட முன்வடிவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏராளமான கவலைகளை வெளியிட்டார். மேலும் அது மாணவர்களின் குறிப்பாக கிராமப் புறங்களிலிருந்து வருபவர்களுக்கும், மாநிலத்தில் பொருளாதார ரீதியில் ஏழையான மாணவர்களுக்குமான நலன்களுக்கு எதிரானதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் ஆளுநர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200ன்படி சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டுவிட்டால், அவர் தனது இசைவை (ஒப்புதலை) அதற்கு அளிக்கவேண்டும். அத்துடன் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

"நீட்’’ தேர்விலிருந்து பிரிந்து செல்லும் தமிழ்நாட்டின் நிலை மிகவும் கேள்விக்குரியது. அகில இந்திய சோதனைத் தேர்வு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையின் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற வழிமுறையாகத்தான் உருவாக்கப்பட்டது. பல நுழைவுத் தேர்வுகள் ஊழலுக்கு வழிவகுத்ததிலிருந்து பல பிரச்சினைகள் இதில் இருந்து வந்தன. தமிழ்நாட்டின் ஒரு பிரிவு மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட முடியாத நிலை இருக்கும் என்ற அச்சம் எற்பட்டதால் அதை நீக்குவதற்கு மாநில அரசு வளங்களை முதலீடு செய்வதுடன் பாடத் திட்டத்தை நவீனப்படுத்தவும் கவனம் செலுத்துகிறது.

ஆனால் அவை ஆளுநரின் ஒதுக்கீடுகளுக்கு தலமாக அமைந்தால் ஓர் அரசியலமைப்புச் சட்ட முன்னுரிமை, அவர் (ஆளுநர்) ஓர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவையின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும். "நீட்" தேர்வை ரத்து செய்வது தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாகும். அத்துடன் அந்த சட்ட முன்வடிவு அ.இ.அ.தி.மு.க. உள்பட இதர பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த வெளிச்சத்தில் தமிழ்நாடு அரசின் வேதனை (அதிருப்தி) ஆளுநரின் தகாத விமர்சனத்தையும், அவருடைய "பெரிய அண்ணன்" மனப்பான்மையாகவும் கருதப்படுகிறது. இது முற்றிலும் அடிப்படை இல்லாதது அல்ல. ஆளுநர்களை வலுவான ஒன்றிய அரசு கூட்டாட்சி அமைப்பு முறையை சிதைக்கப் பயன்படுத்திய நீண்ட வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூட்டாட்சி அமைப்பும், மிகவும் சமீப காலத்தில் ஒன்றிய மாநில மோதல்களும், பி.எஸ்.யின் வரையறை முதல் ஐ.ஏ.எஸ். சேவை விதிகள் வரையிலான ரவியின் நடவடிக்கைகள் எல்லை மீறி செயல்படும் சந்தேகத்தை நிச்சயம் ஏற்படுத்தும். எனவே அவர் இப்போது மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும். "நீட்’’ விலக்கு மசோதாவின் எதிர்காலம், உண்மையில் உறுதியாக கூறக்கூடியதல்ல; இது மாநில அரசை ஒன்றியத்துடன் மோதலில் நிறுத்தியுள்ளது. இந்தச் சட்டமுன் வடிவு சட்டமாவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால், இத்தகைய மோதல்களும், ஒன்றிய அரசுடனான மோதல் பாதையும், விவாதங்களும் தமது சொந்த வழியை ஏற்படுத்தும். தமிழ்நாடு ஆளுநர் சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும்.

இவ்வாறு "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கில நாளேட்டின் டெல்லி பதிப்பு தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

Also Read: "முதல்ல ஏ.கே.இராஜன் குழுவின் அறிக்கையை முழுமையா படிங்க".. முரசொலி தலையங்கம் !