Tamilnadu
கோஷ்டி பூசலால் பறிபோன ‘இரட்டை இலை’ : அதிமுக வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் அலுவலர்!
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளிலும் போட்டியிட தி.மு.க, அ.தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., பா.ஜ.க, அ.ம.மு.க. சுயேட்சி வேட்பாளர்கள் என 58 வேட்பாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் காண தயாராக இருந்த நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட15 வது வார்டு அ.தி.மு.க சார்பில் பாலமுருகன் 3ஆம் தேதியும், மாபூப்பாஷா 4ஆம் தேதி வேட்புமனு மனு தாக்கல் செய்தனர்.
இதனிடையே முதல்நாளில் வேட்புமனு தாக்கல் செய்த பாலமுருகனுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்தநாள் வேட்புமனு தாக்கல் செய்த மாபூப்பாஷாவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டன.
இதனை ஏற்க மறுத்து தி.மு.க சார்பில்தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தது. மனுவை பரிசீலனை செய்து வரும் 7ம் தேதி சின்னம் ஒதுக்கீடு செய்யும்பொழுது தெரியவரும் என தெரிவித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் கற்பகம் வட்டார தேர்தல் பார்வையாளர் பிரகாஷ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ரகுபதி, வாலாஜாபாத் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேமா ஆகியோர் முன்னிலையில் சின்னம் ஒதுக்கும் பணி துவங்கின.
அப்பொழுது 15வது வார்டு அ.தி.மு.க சின்னம் ஒதுக்கும் பிரச்சனை முன்வைக்கப்பட்டன. அ.தி.மு.க.வை சார்ந்த இருவரும் வாபஸ் வாங்க மறுத்ததால், இப்பிரச்சனை குறித்து தேர்தல் அலுவலர்கள் கலந்து ஆலோசனை செய்து பாலமுருகன் மற்றும் மாபுபாஷா இருவருக்குமே சுயேட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகையில் தேர்தல் அலுவலக ஊழியர்கள் ஒட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோஷ்டி பூசலால் அ.தி.மு.கவிற்கு இரட்டை இலைச் சின்னம் பறிபோன சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?