Tamilnadu
NEET - அனைத்து கட்சி கூட்டம் : ஒன்றிய அரசுக்கு பயம் காட்டும் முதலமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்!
நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்கவேண்டும் என நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள் :
மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு.
2006-ல் இதற்காக டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அந்தக் கமிட்டியின்மூலமாக ஒரு அறிக்கையைப் பெற்று, நுழைவுத் தேர்வை இரத்து செய்யும் சட்டத்தை நம்முடைய சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம்.
6.12.2006 அன்று சட்டமன்றத்தில் அதற்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம். 3.3.2007 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதாவது 86 நாட்களில் ஆளுநரும், குடியரசுத் தலைவருமே ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இப்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன்பு, ஒன்றிய அரசில் உள்ள மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இருக்கும் உயர்கல்வித் துறை 15.2.2007 அன்று தமிழ்நாட்டின் சட்டத்தை ஏற்கலாம் என்று ஒப்புதல் வழங்கியது.
அந்த ஒப்புதலில் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான கருத்துகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது.
- நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவது உயர்கல்வியின் தரத்தை குறைக்காது.
- பிளஸ்-டூ தேர்வுகள் மிகவும் நேர்மையானவை - வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை.
- ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான மற்றும் நேர்மையான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ள ஆட்சேபணை இல்லை.
இதைக் கூறியது தமிழ்நாடு அரசு அல்ல; ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை.
அது மட்டுமல்ல; தமிழ்நாடு அரசின் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் போனது.
குடியரசுத் தலைவர் 2006-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ஒழிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
பிறகு, 2007-இல் 87 நாட்களுக்குள் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தார்.
தற்போது 13.9.2021-இல் நாம் நீட் தேர்வு தேவையில்லை இத்தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள் என்று நிறைவேற்றிய சட்டமுன்வடிவை நம்முடைய ஆளுநரே 142 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து, பிறகே, சட்டமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று 1.2.2022 அன்று அதைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!