Tamilnadu
சாய்னா நேவால் விவகாரம்.. விசாரணைக்கு ஆஜராகி மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த் : பின்னணி என்ன?
அண்மையில் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது அவரது காரை வழிமறித்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பேசுபொருளானது.
இந்த பிரச்சனையைக் குறிப்பிட்ட பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இவரின் கருத்திற்கு நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய வகையில் பொருள்கொள்ளும்படி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
நடிகர் சித்தார்த்தின் இந்த ட்விட்டர் கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தனது பதிவை நீக்கினார். பின்னர் நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என விளக்கம் கொடுத்தார்.
இதையடுத்து நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைக்குக் கடிதம் அனுப்பினர். இதையடுத்து சென்னை போலிஸார் நடிகர் சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணைக்கு ஆஜரானர். அப்போது பேட்மிண்டன் வீராங்கனை குறித்த தனது கருத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!