Tamilnadu
வேட்புமனு தாக்கல் நிறைவு... தமிழ்நாடு முழுவதும் 50,000 பேர் போட்டியிட மனு தாக்கல்.. நாளை பரிசீலனை!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாடு முழுவதும் 50,000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்., 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.
கடந்த 2ஆம் தேதி வரை 2,563 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் புதன்கிழமையன்று ஒரே நாளில் மட்டும் 7,590 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டொர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 7ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும். பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!