Tamilnadu
உலகிலேயே அதிக விலை கொண்ட மரம் தமிழகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு; அதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா?
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அனைத்து மரங்கள் மற்றும் அரிய வகை தாவரங்கள் வளர கூடிய காலநிலை கொண்ட தொகுதியாக உள்ளது. இந்த நிலையில் கூடலூரை அடுத்துள்ள நாடுகானி பகுதியில் பலநூறு ஏக்கர் கணக்கில் தாவரங்கள் மரங்கள் ஆய்வு செய்யும் ஜீன்பூல் தாவரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.
இங்கு இலட்சக்கணக்கான அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் மரங்களை ஆய்வு செய்து வரும்போது அங்கு பணிபுரிந்து வரும் வனச்சரகர் பிரசாந்த் அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அரபு நாடுகளில் அதிக மணம் கொண்ட அகர் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 அகர் மரங்கள் காய்களுடன் இருப்பதை கண்டுபிடித்தார்.
இந்த மரமானது நன்கு முற்றிய நிலையில் அந்த மரக்கட்டைகள் மூலம் இந்த வாசனை திரவியங்கள் எடுக்கப்படும் எனவும் ஒரு கிலோ மரக்கட்டை 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை விலை போவதாகவும் தெரியவந்துள்ளது.
உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள மரமாகவும் இந்த மரம் கருதப்படுவதாக தெரிவித்தார். இதில் தயாரிக்கப்படும் வாசனை திரவியம் கோடிக்கணக்கில் விலை போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இந்த 2 மரம் தற்போது ஜீன்பூல் தாவரவியல் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தற்போது அதில் காய்கள் நிறைய உள்ள நிலையில் அந்த காய்கள் மூலம் அதிக அளவிலான மரங்களை நட முடிவு செய்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!