Tamilnadu
Budget2022 : ’ஒரே நாடு’ கொள்கையை விடாத பாஜக; சாமானியனுக்கு ஜீரோ.. கார்ப்பரேட்டுக்கு ஹீரோவா?
2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் வாசிக்க தொடங்கிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 12.30 மணியளவில் உரையை முடித்தார்.
நிர்மலா சீதாராமனின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் விவரம் பின்வருமாறு:-
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ரயில்வே உதவியுடன் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு PM E-Vidhya திட்டம் வழியாக 200 டிவி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்.
டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். ஒன்றிய அரசு சார்பில் க்ரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்படும்; டிஜிட்டல் பொருளாதாரத்தில் இது புதிய எழுச்சியாக இருக்கும்.
1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்.
மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தியா அம்ருத காலத்தில் நுழைந்துள்ளது.
நாடு முழுவதும் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை நாட்டின் எல்லா மூலைகளுக்கும் செல்ல வேண்டும்.
1.5 லட்ச தபால் நிலையங்களில் வங்கி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன; தபால் நிலைய சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் வசதி விவசாயிகளுக்கு பெருமளவில் உதவியுள்ளது.
நகர திட்டமிடலுக்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி.
2030ம் ஆண்டுக்குள் 280 ஜிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்.
சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.
பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்.
பாதுகாப்புத் துறைக்கான இறக்குமதி குறைக்கப்படும்.
One Nation One Registration நிலப்பதிவிற்காக ஒரே நாடு ஒரே பதிவுமுறையின் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளும் முறையை கொண்டு வர முடிவு.
அரசின் மூலதன செலவுகள் ₹ 7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.
பொருளாதார வளர்ச்சிக்கு தனியாரின் பங்கீடு மூலதனமாக உள்ளது.
பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12-ல் இருந்து 7% ஆக குறைப்பு.
கூட்டுறவு சங்களுக்கான மாற்றுவரி 15% ஆக குறைப்பு.
மாநில அரசுகளுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம். ரூ.44,000 கோடியில் நீர்ப்பாசன திட்டங்க நிறைவேற்றப்படும்.
கோதாவரி-பெண்ணாறு-காவிரி உட்பட 5 நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; அது குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு