Tamilnadu
சென்னை வாசிகளுக்கு நற்செய்தி; குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய 6வது நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் விறுவிறு!
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன .
இந்த ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 11.7 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த ஐந்து ஏரிகள் வடகிழக்கு பருவ மழையை நம்பியே உள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது. தற்போது மேலும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அருகே காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து ஆறாவது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த நீர்த்தேக்கம் நபார்டு வங்கி மூலம் 55.7 கோடி நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு இதற்காக 6.5 கோடி நிதியை விடுவித்துள்ளது. 2.2 கோடி மதிப்பில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் 38 கோடி நீர்த்தேக்க கட்டுமானப் பணிக்கும் 11.7 கோடி கடல்நீர் உட்புகுதலை தடுக்க சுவரும் அமைக்கபட உள்ளது. 15 இடங்களில் 40 லட்சம் செலவில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 40% ஜூலை மாதத்துக்குள் முடிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
தற்போது 58 மில்லியன் கன அடியாக உள்ள இந்த ஏரியில் நீர் இருப்பானது இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டபின் 350 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும். ஆரணி ஆற்றில் திறக்கப்படும் 1.76 டிஎம்சி உபரிநீர் கடலுக்கு செல்லாமல் தடுக்கப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!